‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பசங்க படத்தில் சிறுவனாக நடித்த ஸ்ரீராம், பின்னர் கோலிசோடா, கமரக்கட்டு, பாபநாசம் போன்ற படங்களில் நடித்தார். அதையடுத்து இப்போது தமிழன் பட டைரக்டர் மஜீத் இயக்கியுள்ள பைசா என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். குப்பை பொறுக்கும் வேடத்தில் இதில் நடித்துள்ள ஸ்ரீராம், கதாபாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்திருப்பதாக சொல்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த படத்தின் கதையைக்கேட்டதுமே எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. காரணம், குப்பை பொறுக்குபவர்களின் வாழ்க்கை அந்த கதையில் இருந்தது. அதோடு அவர்கள் இந்த சமூகத்துக்கு எந்த வகையில் பயன்படுகிறார்கள் என்பதும் சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக, குப்பையை சாலைகளில், தெருக்களில் வீசுவதால் ஏற்படும் தீமைகளைப்பற்றியும் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பைசா படம சமூகத்துக்கு நல்லதொரு விழிப்புணர்வு படமாக இருக்கும். ஆனால் அதை கமர்சியலாக படமாக்கியிருக்கிறார் டைரக்டர். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு குப்பை பொறுக்கு பவர்களை தூரத்தில் நின்று கவனித்து, அதை உள்வாங்கிக்கொண்டு நானும் குப்பை பொறுக்கும் பையனாகவே பக்காவாக என்னை மாற்றிக்கொண்டு நடித்தேன் என்கிறார் ஸ்ரீராம்.