தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்னும் ஒரு சில நாட்களில் கபாலி படத்தின் கவுண்டவுன் ஸ்டார்ட் ஆக இருக்கிறது. அதாவது கபாலி படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 15 என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. என்றாலும் இன்னும் படம் சென்சாருக்கு செல்லவில்லை என்பதால் ரிலீஸ் தேதியை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறார் தாணு.
இன்னொரு பக்கம், கபாலி படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இந்த வார இறுதியில் முடிவடைந்ததும் சென்சாருக்கு படத்தை அனுப்ப திட்டமிட்டிருக்கிறாராம் தயாரிப்பாளர் தாணு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உலகமெங்கும் வெளியாகவிருக்கும் 'கபாலி' படத்தின் வியாபாரம் குறித்து வரும் செய்திகள் திரையுலகினரை மலைக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவலின்படி, 'கபாலி' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விநியோகத்துறையில் கடந்த வருடம் கால் பதித்த 'ஜாஸ் சினிமாஸ்' நிறுவனம் வெளியிட்ட முதல் திரைப்படம் அஜித் நடித்த 'வேதாளம்'. அதோடு சமீபத்தில் வெளியான 'இறைவி', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' ஆகிய படங்களின் சென்னை வெளியீட்டு உரிமையையும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனமே வாங்கியது. இப்போது மிகப்பெரிய தொகை கொடுத்து 'கபாலி' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கி இருக்கிறதாம் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம்.