ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜமெலியின் பிரம்மாண்டமான இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து இந்தியாவில் மாபெரும் வெற்றியும், வியக்கத்தக்க வசூலையும் பெற்ற படம் 'பாகுபலி'. இப்படத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் என படக்குழுவினர் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தனர். அதற்கான வேலைகளையும் ஆரம்பித்திருந்தனர். இந்தியாவை அடுத்து இப்படத்தை சீனாவில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்திருந்தனர். அதற்காக சீனாவில் உள்ள பெரிய வினியோக நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்தனர்.
அதன்பின் சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பத்திரிகையாளர்கள் பலரும் ஐதராபாத்தில் 'பாகுபலி' படக்குழுவினரை சந்தித்துப் பேசினர். படத்தை சீன மொழியில் டப்பிங் செய்யும் வேலைகளும் படத்தை மார்க்கெட்டிங் செய்யும் வேலைகளும் ஒருசேர நடந்து வந்தன. தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதியை சீன உரிமையை வாங்கியுள்ள சீன நிறுவனம் நேற்று அறிவித்தது. அதன்படி சீனாவில் ஜுலை 22ம் தேதி 'பாகுபலி' வெளியிடப்படுகிறது.
இந்தியாவில் விட சீனாவில் அதிக திரையரங்குகளில் அதாவது சீனா முழுவதும் சுமார் 6500 திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த முதல் பாகம் சிறப்பான ஓடினால் இரண்டாம் பாகமும் சீனாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
அதோடு, சீனாவில் ஆமீர்கான் நடித்த 'பிகே' படத்தின் டிரைலர் சாதனையையும் 'பாகுபலி' முறிடியத்துள்ளதால் ரசிகர்களின் வரவேற்பு 'பிகே' படத்தை விட 'பாகுபலி' படத்திற்கு அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.