மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
திரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திற்கு பிறகு இளவட்ட ரசிகர்களின் பேவரிட் ஹீரோவாகி விட்டார் ஜி.வி.பிரகாஷ்குமார். அந்த படத்தில் இளைஞர்களின் ரசனைக்கு தீனி போட்ட அவர், அதன்பிறகு இளைஞர்களின் ரசனையை மனதில் கொண்டே கதைகளை கேட்டு ஓகே செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் நடித்து வெளியாகியுள்ள எனக்கு இன்னொரு பேர் இருக்கு படமும் ரசிகர்களின் வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து தனது அடுத்த படமான புரூஸ்லியை வெளியிட தயாராகிக்கொண்டிருக்கிறார் அவர்.
இந்த அப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் தற்போது நடந்து வரும் நிலையில், சமீபகாலமாக படங்கள் வெளியாவதற்கு முன்பு சில மாதங்களாக ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டியதிருக்கிறது என்பதால், ஜூலை மாதம் டீசரை வெளியிட்டு விட்டு, ஆகஸ்டில் இசை வெளியிடு நடத்தி, செப்டம்பரில் படத்தை வெளியிடுகிறார்கள். மேலும், தனது ஒவ்வொரு படத்திலுமே இளைஞர்களை ஆடிப்பாட வைக்கும் அதிரடி மெட்டுக்கள் ஒன்றிரண்டை வைத்து வரும் ஜி.வி.பிரகாஷ், இந்த படத்திலும் இரண்டு குத்துப்பாட்டுகளை இணைத்துள்ளாராம். இந்த பாடல்களுக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கிறாராம் ஜி.வி.,