தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தவர் ரித்விகா. அதற்கு முன்பே சில படங்களில் நடித்தபோதும் இந்த படம்தான் அவரை பேச வைத் தது. அதோடு, அப்படத்தில் கலையரசனுடன் அவர் நடித்த ரொமான்ஸ் காட்சிகளை ரித்விகாவை பெரிதாக பேச வைத்தது. அதோடு, அவரைத்தேடி சில கதாநாயகி வாய்ப்புகளும் வாயில் கதவை தட்டியது. ஆனால், அப்படி சென்ற எல்லா படங்களும் கமர்சியல் கதைகள். அதனால் ரித்விகாவை கவர்ச்சி உடைதரித்து வரிந்து கட்டி நடிக்க சொன்னார். அதைக்கேட்டு ஆடிப்போன ரித்விகா, அப்படி நடிக்க என்னிடம் போதுமான உடல்கட்டை இல்லை ஆளை விடுங்கள் என்று ஓட்டம் பிடித்தார்.
இந்த நிலையில், மெட்ராஸ் படடைரக்டர் ரஞ்சித் ரஜினியை வைத்து இயக்கியுள்ள கபாலி படத்திலும் ரித்விகாவுக்கு ஒரு முக்கியமான வேடம் கொடுத்திருக்கிறார். அந்த வகையில், ரஜினியே பாராட்டும் அளவுக்கு கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார் ரித்விகா. இதனால் மெட்ராஸ் படம் போலவே கபாலி படமும் அவரை பேச வைக்கும் என்கிறார்கள். ஆக, கபாலிக்கு பிறகு இன் னும் பாப்புலர் நடிகையாகி விடுவார் என்று சமீபத்தில் ஒரு புதுமுக டைரக்டர் ரித்விகாவை தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க கேட்டுள்ளார். அதற்கு, முதலில் பர்பாமென்ஸ் ஸ்டோரி என்பீர்கள். பின்னர் பாடல் காட்சியில் மட்டும் கமர்சியலுக்காக கவர்ச்சி காட்ட வேண்டும் என்பீர்கள். இதெல்லாம் நமக்கு செட்டாகாது. அதனால் நான் கேரக்டர் நடிகையாகவே நடித்து விட்டுப்போகிறேன். ஆளை விடுங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டாராம்.