சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதன்பிறகு ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஹீரோயினாக நடித்தபோதும் அந்த படம் ஓடாததால் தமிழில் தொடர்ந்து அவருக்கு ஹீரோயினி வேடங்கள் கொடுக்கவில்லை. அதனால் கமலின் பாபநாசம் படத்தில் அவரது மகளாக முக்கிய வேடத்தில் நடித்தார் நிவேதா. இந்த நிலையில், தெலுங்கிற்கு சென்ற நிவேதாவுக்கு நானியுடன் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் வெளியான அப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. விளைவு, புதிய படங்களுக்காக சில டைரக்டர்களும் அவரிடம் கதை சொல்லியிருக்கிறார்களாம். அதனால் தெலுங்கில் கவனத்தை திருப்பியிருக்கிறார் நிவேதா தாமஸ்.
இந்த நிலையில், கத்தி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த அனுகிருஷ்ணாவின் கவனமும் இபபோது தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியிருக்கிறது. அந்த படத்தில் நடித்த பிறகு சில படங்களில் அவர் நாயகியாக நடித்தபோதும் அப்படங்கள் வெளிவராமல் கிடக்கின்றன. அதனால் நிவேதா தாமஸைப்போன்று தானும் தெலுங்கு படவேட்டையில் இறங்கி, ஆந்திராவில் மார்க்கெட்டை பிடிக்கலாமா? என்று யோசித்து வருகிறாராம். அதோடு, தமிழில் கோடு போட்டு நடித்து வரும் அனுகிருஷ்ணா தெலுங்கில் ஓரளவு கிளாமர் கொடியேற்றவும் முடிவு செய்திருக்கிறாராம்.