‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60-வது படத்தின் படப்பிடிப்பு, சென்னை, நெல்லை, ஐதராபாத் என சில பகுதிகளில் அடுத்தடுத்து நடந்து வந்தது. அந்த வகையில், வசன காட்சிகளின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடத்தப் பட்டு விட்டதாக சொல்கிறார்கள். மேலும், ஜூன் 22-ந்தேதி தனது பிறந்த நாளுக்கு முன்பே அவர் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று விட்டார். இதனால் கடந்த சில வருடங்களாக விஜய்யுடன் அவரது பிறந்த நாளை சென்னையில் கோலாகலமாக கொண்டாடி வந்த அவரது ரசிகர்கள் இந்த ஆண்டு விஜய் இல்லாமல் பிறந்த நாளை கொண்டாடினர்.
இந்நிலையில், விஜய் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக அடுத்த மாதம் தொடக்கத்தில் ஐரோப்பா செல்கிறார்கள். அங்கு விஜய்- கீர்த்திசுரேஷ் இடம்பெறும் டூயட் பாடல்கள் படமாக்கப்பட உள்ளதாம். அதோடு ஒரு அதிரடி சண்டை காட்சியும் அங்குதான் படமாகிறதாம். அதற்கான ஏற்பாடுகள் தற்போது ஐரோப்பாவில் முகாமிட்டு ரெடி பண்ணி வருகிறார்கள். மேலும், அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்கு சென்றிருந்த விஜய் அடுத்த மாதம் 7-ந்தேதி சென்னை திரும்புகிறார். இங்கு வந்து சில நாட்களிலேயே அவர் ஐரோப்பா புறப்பட்டு செல்கிறாராம்.