இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அஜித்துக்கு சினிமாவுக்கு வெளியே அதிகப்படியான ரசிகர்கள் இருப்பது போன்று நடிகர்களிலும் சிலர் அவரது ரசிகர்களாக உள்ளனர். அவர்களில் முதலிடம் பிடிப்பவர் சிம்பு. அஜித் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டு அஜித்துக்கு போன் செய்து கருத்து தெரிவிக்கும் முதல் ரசிகராக இப்போதுவரை இருந்து வருகிறார் சிம்பு. அவரைப்போலவே பலரும் தாங்கள் அஜித் ரசிகர் என்று சொல்லிக்கொள்வதோடு, சிலர் அஜித் ரசிகராகவும் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மா.க.பா.ஆனந்தும் நான் அஜித்தின் தீவிரமான ரசிகர் என்கிறார். அதை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தற்போது தான் நடித்துள்ள அட்டி படத்தில் ஒரு பாடலில் அஜித்தின் கட்அவுட்களை வைத்து அஜித் புகழ் பாடும் பாடலை பாடியபடி நடித்துள்ளார். இதுவரை அஜித்தின் ரசிகராக நடிக்கிற விச யத்தை வெளியில் சொல்லாமல் வைத்திருந்தவர்கள், இப்போது படம் திரைக்கு வரத்தயாராகி விட்டதால், அஜித்தின் கட்அவுட்கள் இடம்பெறும் அந்த பாடலை வெளியிட்டு படத்திற்கு பப்ளிசிட்டிகளை முடுக்கி விட தயாராகி விட்டனர்.