அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ரானி. அதன் பின் 'யாகாவாராயினும் நா காக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். இதில், 'வே.வ.வெள்ளக்காரன்' படம் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பெற்றது. தற்போதுள்ள நடிகைகளில் இரண்டாம் நிலையில் உள்ள நாயகர்களுடன் நடிப்பதற்கு பொருத்தமான நாயகிகள் அதிகம் இல்லாததால் அந்த வாய்ப்புகள் நிக்கியைத் தேடி வருகின்றன.
தற்போது 'மொட்ட சிவா கெட்ட சிவா, கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் நிக்கி. தற்போது, 'கீ' என்ற புதிய படத்தில் ஜீவாவுடன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதோடு விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கும் ஒரு படத்திற்கும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் சில படங்களில் அவரை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
அழகுடனும், கிளாமருடனும், தமிழ் பேசத் தெரிந்த நடிகையாக இருப்பதும் நிக்கியைத் தேடி வாய்ப்புகள் வரக் காரணமாக இருக்கின்றன.