மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரபல தயாரிப்பாளர் கல்யாணின் மகன் ஹரிஷ். சாமி இயக்கிய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பொறியாளன், வில்அம்பு படங்களில் நடித்தார் தற்போது அவர் சிம்புவின் பாணியில் தனி பாடல் ஒன்றை பாடி அதனை யூ டியூப்பில் வெளியிட இருக்கிறார். “ஐ எம் சிங்கிள்... ரெடி டூ மிங்கிள்... தினமும் உன்னை நினைச்சேன்...” என்று தொடங்கும் அந்தப் பாடல் ஒரு பெண்ணை நினைத்து ஒரு இளைஞன் பாடுவதாக அமைந்துள்ளது. பிரபல இசை அமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன் எல்.வி.முத்துகுமார் இசை அமைத்துள்ளார், ஹரிஷ் பாடலை எழுதி, பாடி, நடித்துள்ளார்.
இதுகுறித்து ஹரிஷ் கூறியதாவது: யுவன் சங்கர் ராஜா இசை கற்றுக்கொண்ட சதா மாஸ்டரிடம்தான் நானும் இசை கற்றேன். 7 வயதிலிருந்து இசை கற்று வருகிறேன். இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகர் ஆகிவிட்டேன். என் இசை ஆர்வத்தை வெளிப்படுத்தவே இந்த பாடலை உருவாக்கினேன். இதனை எனது பிறந்த நாளான ஜூன் 29ந் தேதியன்று யூ டியூப்பில் வெளியிட இருக்கிறேன். என்கிறார்.