ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
திரையுலகில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மிக அரிது. அவர்களில் இயக்குநர் அமீர் முக்கியமானவர். நண்பர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார். அவர் இயக்கிய மௌனம் பேசியதே தொடங்கி ஆதிபகவன் வரை அமீரின் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைப்பாளர். எத்தனையோ முன்னணி இசையமைப்பாளர்கள் இருந்தாலும் யுவனை விட்டு வேறு யாரிடமும் அமீர் சென்றதில்லை.
தற்போது ஆர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் அமீர். ராகவன் இயக்கத்தில் ஆர்யா, கேதரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கடம்பன் படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஆர்யா. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்காக தனது உடல் எடையை அதிகரித்திருக்கிறார் ஆர்யா. இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
கடம்பன் படத்தைத் தொடர்ந்து நடிப்பதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைக் கேட்டு வந்தார் ஆர்யா. இக்கதையின் நாயகன் பெரும் பலசாலியாக இருக்க வேண்டும் என்பதால் ஆர்யா அதற்கு சரியாக இருப்பார் என்று கருதிய அமீர் ஆர்யாவை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். அமீர் இயக்கத்தில் நடிக்க ஆர்யா தயாராகிவிட்டார். அடுத்கட்டமாக டெக்னீஷியன்களை கமிட் பண்ணிய அமீர், இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவை கமிட் பண்ணியயுள்ளார். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, யுவனுக்கு பிரேக் கொடுக்கும் எண்ணத்தில் தன் படத்தை கொடுத்திருக்கிறார் அமீர்.