தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விதார்த் நடித்த ஆள் படத்தை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் மெட்ரோ. பெண்களிடம் செயின் பறிக்கும் இளைஞர்களை பற்றிய கதைஅம்சம் கொண்ட இந்தப் படம் வன்முறைக்காட்சிகள் காரணமாக சென்சாரில் தடை செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு ‛ஏ' சர்டிஃபிக்கேட்டுடன் வெளியாகி உள்ளது.
ஃபர்ஸ்ட் காப்பி ரெடியாகி பிசினஸ் ஆகாமல் ஒரு வருடத்துக்கு மேலாக கிடப்பில் கிடந்த ‛மெட்ரோ' படத்தை காஸ்மோ சிவா என்ற விநியோகஸ்தர், டிஸ்ட்ரிபியூசன் அடிப்படையில் தமிழகம் முழுக்க தியேட்டர் எடுத்து வெளியிட்டிருக்கிறார். ‛மெட்ரோ' பட தயாரிப்பாளருக்கு உதவி செய்வதற்காக படத்தை வெளியிட முன் வந்த சிவாவுக்கு, படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன் கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது மெட்ரோ படத்தில் தெலுங்கு ரைட்ஸை 10 லட்சத்துக்கு வாங்க சம்மதித்து அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் வேறு ஒருவரும் மெட்ரோ படத்தின் தெலுங்கு ரைட்ஸை கூடுதல் விலைக்கு கேட்டிருக்கிறார்கள். அதனால் காஸ்மோ சிவாவிடம் கூடுதல் தொகை கொடுங்க, இல்லேன்னா வேறு ஆள் ரெடியாக இருக்கிறார்கள் என்று சொல்ல அப்செட்டாகிவிட்டாராம் சிவா. படம் ரிலீஸ் பண்ண முடியாமல் இருந்த சூழ்நிலையில் பணத்தை ரிலீஸ் செய்த தனக்கு இப்படியொரு அனுபவமா என்று வருத்தப்பட்டாராம் காஸ்மோ சிவா.