மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப். ஹீரோ பன்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான டைகர், சமீபத்தில் பாகி என்ற ஆக்ஷ்ன் படத்தில் நடித்தார். இப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. தற்போது அவர் பிளையிங் ஜாட் என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னை எந்த நடிகருடனும் ஒப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து டைகர் கூறியிருப்பதாவது... ‛‛வருண் தவான், ரன்வீர் சிங், சித்தார்த் மல்கோத்ரா போன்ற நடிகர்கள் எல்லாம் ஐந்தாறு படங்களில் நடித்துவிட்டனர். ஆனால் நான் வெறும் இரண்டு படங்களில் தான் நடித்துள்ளேன். எனவே என்னை மற்ற நடிகர்களுடன் ஒப்பிட வேண்டாம். நான் நடித்த இரண்டு படங்களையும் பலர் பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் நான் இன்னும் சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது'' என்று கூறியுள்ளார்.