பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் சுல்தான் . இந்தப்படம் ஜூலை மாதம் 6ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப்படத்துடன் அஜய் தேவ்கனின் சிவாய் படத்தின் டிரைலரும் ரிலீஸாகிறது.
இதைப்பற்றி அஜய் தேவ்கனுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது...." சல்மான் கானும் அஜய் தேவ்கனும் நல்ல நட்புடன் இருப்பதால் அஜய் தேவ்கனின் சிவாய் படத்தின் டிரைலரை சுல்தான் படத்துடன் ரிலீஸ் செய்ய சல்மான் கான் ஒப்புக் கொண்டார் என்றும், இதையடுத்து சுல்தான் படத்துடன் சிவாய் டிரைலர் ஜூலை மாதம் 6ஆம் தேதி வெளியாகிறது " என்றார்கள்.
அஜய் தேவ்கன் தன்னுடைய கனவு படமாக சிவாய் படத்தை உருவாக்கி வருகிறார் . இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பல்கேரியாவில் உள்ள மலை பகுதியில் எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சிவாய் படம் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி, ஏய் தில் கே முஷ்கில் படத்துடன் ரிலீஸாகிறது.