ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிரிக்கெட் வீரர் அசாரூதினின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக சமீபத்தில் வந்த நிலையில் அடுத்தப்படியாக மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறும் படமாக உருவாகி வருகிறது. இதில் தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிக்க அவருடன் கைரா அத்வானி, திஷா பதானி முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தை வருகிற செப்., 2ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு முன்பு அறிவிந்திருந்தது. ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து இப்படத்தை தயாரித்து வரும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவின் மூத்த அதிகாரி விஜய் சிங் கூறுகையில், ‛சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‛தோனி' படத்தின் ரிலீஸ் தேதி செப்.,30-ம் தேதிக்கு தள்ளிபோய் உள்ளது' என்று கூறியுள்ளார்.