Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

விஜய்யை மாற்றிய திரைப்படங்கள் : பிறந்தநாள் ஸ்பெஷல்

22 ஜூன், 2016 - 10:15 IST
எழுத்தின் அளவு:
Movies-changed-in-Vijay-Carrier-:-Vijay-Birthday-Special

தமிழ்த் திரையுலகத்தின் இன்றைய வசூல் நாயகர்களில் முக்கியமானவர் விஜய். தனக்கென மிகப் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை உலக அளவில் வைத்திருப்பவர். சிறியவர் முதல் பெரியவர் வரை விஜய்யின் படங்களை ரசித்துப் பார்ப்பவர்கள் அதிகம்.


முழுக்க முழுக்க 'என்டெர்டெயின்மென்ட்' என்பதை மட்டுமே மனதில் கொண்டு தன்னுடைய படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தால் மட்டுமே போதும் என்று முடிவெடுத்து அதற்கேற்றபடி நடித்தும் வருகிறார். விஜய்யின் இன்றைய வளர்ச்சி சாதாரணமாகக் கிடைத்ததும் இல்லை. அறிமுகமான நாளிலிருந்து படிப்படியாக வளர்ந்து ஏற்றத், தாழ்வுகளுக்குப் பிறகுதான் இப்படி ஒரு நிலையை அவர் அடைந்திருக்கிறார்.


விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் அவரை சில முக்கியமான திரைப்படங்கள் அவரை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லக் காரணமாக அமைந்துள்ளன. அப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெற்றாலும் சரி, பெறாமல் போனாலும் சரி விஜய் என்ற நடிகரின் வளர்ச்சி என்பது ஒரு ஆற்றின் நீரோட்டத்தைப் போன்றே ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்யை அப்படி மாற்றியமைத்த சில படங்களைப்பற்றி அவருடைய பிறந்தநாளான இன்று(ஜூன் 22-ம் தேதி) பார்ப்போம்...


பூவே உனக்காக : 1992ம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' படத்தில் நாயகனாக அறிமுகமாகும் போது விஜய்க்கு வயது 19 மட்டுமே. முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோவாக அதிரடி காட்டிய விஜய் தொடர்ந்து நடித்த படங்கள் அனைத்துமே பி அண்ட் சி ரசிகர்களை மனதில் வைத்தே எடுக்கப்பட்ட படங்களாக இருந்தன. விஜய்க்கு அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைக் கொடுத்த படமாக அமைந்த படம் 'பூவே உனக்காக'. காதலை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற கிளைமாக்ஸ் காதல் வசனம் காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு இன்றும் மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.


லவ் டுடே : 'பூவே உனக்காக' படம் தந்த வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்து வெளிவந்த நான்கு படங்களுமே தோல்விப் படங்களாகவே அமைந்தன. மீண்டும் விஜய்க்கு ஒரு திருப்பு முனையைத் தந்த படமாக அமைந்த 'லவ் டுடே' படமும் ஒரு காதல் திரைப்படம்தான். அன்றைய கால கட்டத்தில் காதலால் இளைஞர்கள் எப்படியெல்லாம் போகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாகச் சொன்ன அந்தப் படம் விஜய்யை ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர வைத்தது.


காதலுக்கு மரியாதை : 'லவ் டுடே' படத்திற்குப் பிறகு விஜய் சிவாஜியுடன் நடித்த 'ஒன்ஸ்மோர்' திரைப்படமும், சூர்யாவுடன் நடித்த 'நேருக்கு நேர்' படமும் பெரிய வெற்றியைப் பெறாமல் சுமாராக ஓடின. ஆனாலும், அடுத்து வந்த 'காதலுக்கு மரியாதை' திரைப்படம் விஜய்யை இளம் ரசிகர்கள், ரசிகர்களையும் தாண்டி குடும்பத்தினர் அனைவரிடமும் கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி விஜய்க்கு வியாபார ரீதியாக அவரை வேறு ஒரு கட்டத்திற்குக் கொண்டு சென்றது.


குஷி : 'காதலுக்கு மரியாதை' படத்திற்குப் பிறகு விஜய் நடித்து வெளிவந்த படங்களில், 'நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும்' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால், அடுத்து தொடர்ச்சியாக 'என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தாலும், 'குஷி' படத்தின் மூலம் தன்னுடைய ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றார். இன்றும் இந்தப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் தவறாமல் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.


பகவதி : 'குஷி' படத்திற்குப் பிறகு விஜய் தொடர்ந்து காதல் திரைப்படங்களில்தான் அதிகம் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், 2002ம் ஆண்டு வெளிவந்த 'பகவதி' திரைப்படம் விஜய்யின் ஆக்ஷன் பக்கத்தை கொஞ்சமாகக் காட்டியது. தனக்குள்ளும் ஒரு ஆக்ஷன் ஹீரோ உறங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை தனது நடிப்பின் மூலம் காட்டினார் விஜய். மிகப் பெரிய வெற்றியை இந்தப் படம் பெறவில்லை என்றாலும் இயக்குனர்கள் மத்தியில் விஜய்க்கு ஆக்ஷன் படங்களும் பொருத்தமாக இருக்கும் என்பதை இந்தப் படம் புரிய வைத்தது.


திருமலை : விஜய்யை ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக வெளிப்படுத்திய படம் 'திருமலை'. அறிமுக இயக்குனர் ரமணா இயக்கத்தில் விஜய் நடித்த இந்தப் படம் விஜய்க்கும் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் விஜய்யின் திரையுலகப் பயணம் புதிய பாதையில் நடைபோட ஆரம்பித்தது.


கில்லி : 'திருமலை' படம் தந்த திருப்பு முனையை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட படம் 'கில்லி'. தெலுங்குப் படத்தின் ரீமேக் என்றாலும் விஜய்யின் நகைச்சுவையும், ஆக்ஷனும், காதலும், சென்டிமென்ட்டும் இந்தப் படத்தில் வேறு ஒரு லெவலுக்கு இருந்தது. விஜய்யின் அதிரடியான நடன அசைவுகளும், பாடல்களும் பற்றிக் கொண்டு 'கில்லி' படம் விஜய்யின் மார்க்கெட்டை கிர்ரென உயர்த்தியது.


திருப்பாச்சி : 'திருமலை' படத்திற்குப் பிறகு வெளிவந்த 'கில்லி' படம் கதையை மையமாகக் கொண்டு மட்டுமே நகர்ந்தது. ஹீரோயிசம் என்பது இருந்தாலும் அது விஜய்யை தனிப்பட்ட விதத்தில் ஒரு ஆக்ஷன் இமேஜுக்குள் உட்கார வைக்கவில்லை. ஆனால், பேரரசு இயக்கத்தில் வெளிவந்த 'திருப்பாச்சி' படம் 'பன்ச்' டயலாக்குகளுக்காகவும், விஜய்யின் பரபர ஆக்ஷனாலும் அவருக்கென தனி இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது.


போக்கிரி : விஜய்யின் ஆக்ஷன் அதிரடியை முழுமையாக ரசிக்க வைத்த மற்றுமொரு திரைப்படம். பிரபுதேவாவின் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்றதுமே அந்தப் படம் நடனத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ள படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதையும் மீறி சஸ்பென்சுடன் கூடிய ஒரு ஆக்ஷன் படத்தைக் கொடுத்தார் பிரபுதேவா. தமிழ்த் திரையுலகத்தில் எதிர்பாராத ஒரு புதிய கூட்டணியின் வெற்றி அதிகம் பேசப்பட்டது.


துப்பாக்கி : 'திருப்பாச்சி' படத்தில் பார்த்த அதிரடி விஜய்யை மீண்டும் பார்க்க வைத்த படம் 'துப்பாக்கி'. அந்த இரண்டு படங்களுக்கிடையில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வந்தாலும் 'போக்கிரி' படத்தைத் தவிர வேறு படங்கள் அந்தப் படங்களை நெருங்க முடியாத படங்களாகவே இருந்தன. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படம் அந்தப் படங்களை மீறிய ஆக்ஷன் படமாக வந்தது. விஜய்யை இன்னும் ஒரு படி மேலே உயர்த்திய படமாகவும் அமைந்தது.


தெறி : 'துப்பாக்கி' படத்திற்குப் பிறகு விஜய் நடித்து வந்த 'தலைவா, ஜில்லா, கத்தி' ஆகிய படங்கள் முழு ஆக்ஷனிலிருந்து சற்றே விலகிய படங்களாக இருந்தன. விஜய்யை முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு அந்தப் படங்கள் முழுமையான தீனியாக அமையவில்லை. அந்தக் குறையைப் போக்கிய படமாக வந்த படம்தான் 'தெறி'. தலைப்பிற்கேற்றபடியே அதிரடி ஆக்ஷன் அசத்தலாக இருந்தது.


விஜய் திரையுலகத்தில் நடிக்க வந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாயகனாக அறிமுகமாகி 24 வருடங்கள் ஆகிவிட்டது. இயக்குனரின் மகனாக விஜய் அறிமுகமானாலும் அவருடைய வளர்ச்சி முழுவதும் அவருடைய அப்பாவால் மட்டுமே வந்துவிடவில்லை. ஒரு ஹிட் வந்தாலும் அடுத்து நான்கைந்து தோல்விகள் வந்து விஜய்யின் மார்க்கெட்டை பதம் பார்த்தன. அதையும் மீறி அவர் எழுந்து நிற்கிறார் என்றால் அதற்கு அவருடைய உழைப்பும் திறமையும் மட்டுமே காரணம்.


திரையுலகத்தில் அறிமுகமாவதற்கு வேண்டுமானால் யாருடைய தயவாவது தேவைப்படலாம். ஆனால், எழுந்து நிற்பதற்கும், வளர்வதற்கும் தனித்த உழைப்பும், திறமையும் வேண்டும். திரையுலகத்தில் இயக்குனரின் மகன்கள், நடிகர்கள் மகன்கள், நடிகைகளின் மகன்கள் என பலர் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பெயரும், புகழும் விஜய்க்கு கிடைத்ததற்குக் காரணம் அவருடைய முயற்சி மட்டுமே. அதுதான் அவரை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளது.


பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்! வாசகர்களாகிய நீங்களும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கலாம், அதோடு விஜய்யை பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும், அவரின் படம் பற்றிய விஷயங்களையும் இங்கு பதிவு செய்யலாம்...!


Advertisement
அபார வெற்றி, அமைதியான பயணம்: விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்அபார வெற்றி, அமைதியான பயணம்: விஜய் ... ரஜினி போல் ஒருவரும் இல்லை - ராதிகா ஆப்தே புகழாரம் ரஜினி போல் ஒருவரும் இல்லை - ராதிகா ...


வாசகர் கருத்து (25)

N.SIVAKUMAR - sivagiri,இந்தியா
22 ஜூன், 2016 - 19:21 Report Abuse
N.SIVAKUMAR விஷ் யூ ஹாப்பி BIRTHDAY விஜய்
Rate this:
Murugesh Kumar - chrnnai,இந்தியா
22 ஜூன், 2016 - 17:49 Report Abuse
Murugesh Kumar என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Rate this:
prakhash.v - Chennai,இந்தியா
22 ஜூன், 2016 - 16:49 Report Abuse
prakhash.v Hello Vijay bro, Many more happy returns of the day, My all time ur favourite movies is Thuppaki, Gilly, Kathi, Kushi, Lovetoday and Theri .. Still with ur hard work u will success more and more. All the very best..Have a happy and long life to u and ur family
Rate this:
G. ThirumulaKrishnan - Cuddalore,இந்தியா
22 ஜூன், 2016 - 16:47 Report Abuse
G. ThirumulaKrishnan Happy Birthday to Joseph Vijay.
Rate this:
vijayakumar.t - rajapalayam,இந்தியா
22 ஜூன், 2016 - 16:19 Report Abuse
vijayakumar.t mass na vijay than
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in