Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அபார வெற்றி, அமைதியான பயணம்: விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்

21 ஜூன், 2016 - 17:43 IST
எழுத்தின் அளவு:
Success-and-Simplicity-:-Vijay-Birthday-Special

அந்த தந்தைக்கு தன் மகன் மீது அளவு கடந்த அன்பு. ஒரு மகள் ஒரு மகன் என்று வாழ்ந்த அவருக்கு மகள் உலகை விட்டே பிரிந்து சென்று விட்டதால் அந்த அன்பையும் மகன் மீது சேர்த்தே செலுத்தினார். தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு பாசிட்டிவான கேரக்டருக்கு மகன் பெயரையே வைப்பார். பள்ளியில் படிக்கும் காலத்தில் அந்த பள்ளிக்கு இரண்டு வாசல்கள். இரண்டிலும் அவரை அழைத்துச் செல்ல கார் நிற்கும். அவ்வப்போது புதிய ரக கார் எது அறிமுகமானாலும் மறுநாள் அவர் வீட்டு முன் நிற்கும், அந்த அளவிற்கு இருந்தது அப்பா மகன் உறவு. அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். மகன் ஜோசப் விஜய்.


சினிமா ஆசை : சில படங்களில் ஆசைக்காக மகனை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். அது விஜய்யின் மனதில் நடிப்பு ஆசையை தூண்டியது. ஒரு நாள் “அப்பா நான் சினிமாவில் ஹீரோவாக நடிக்கணும்” என்றார். “இந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு நடிக்கப்போறியா வேற ஏதாவது செய்” என்றார் தந்தை. வற்புறுத்தல் தொடர்ந்தது. அம்மா ஷோபா சந்திரசேகர் சிபாரிசு செய்தார். “நான் யார்கிட்டேயும் போய் என் மகனுக்கு சான்ஸ் கொடுங்கன்னு கேட்க மாட்டேன். என்னோட சொந்த படத்துல நடிக்க வைக்கிறேன்” என்றார்.


அடையாளம் தந்த ரசிகன் : நாளைய தீர்ப்பு 1992ல் வெளிவந்தது. படம் வெற்றிபெறவில்லை. இப்போது அப்பாவுக்கு கோபம் “40 படத்துக்கு மேல் இயக்கிய என்னால் என் மகனை ஜெயிக்க வைக்க முடியலையா?” தன்னை தானே கேட்டுக் கொண்டார். செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா படங்களை விஜய்யை ஹீரோவாக போட்டு எடுத்தார். ரசிகன் மட்டும் கொஞ்சம் வெற்றியையும் கடுமையான விமர்சனத்தையும் சந்தித்தது. விஜய் என்ற நடிகரை மக்கள் அடையாளம கண்டு கொள்ள வைத்தது.


காதலுக்கு மரியாதை தந்தவர் : பூவே உணக்காக விஜய்யின் அடுத்த கட்ட பயணத்தை தொடங்கி வைத்தது. நம்ம வீட்டு பிள்ளை இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து மென்மையான காதல் கதைகளில் நடித்து யூத் ரசிகர்களை பிடித்தார். காதலுக்கு மரியாதை வெள்ளி விழா நாயகன் ஆக்கியது. திருமலை விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக்கியதுடன் வசூல் மன்னராகவும் மாற்றியது. அன்று முதல் இடையில் சில படங்கள் தோற்றிருந்தாலும் பெரும்பான்மையான வெற்றிப் படங்களால் தன்னை இப்போதும் வசூல் சக்ரவர்த்தியாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.


புதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பவர் : தோல்வியையும், வெற்றியையும் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாத அற்புதமான நடிகர் விஜய். கடைசியாக அவர் நடித்த தெறி படம் இன்னும் வசூலை கொடுத்துக் கொண்டிருக்கும்போது அதை பற்றி யோசிக்காமலேயே அடுத்த படத்தில் பிசியாகிவிட்டார். 60 படங்களில் நடித்திருக்கு விஜய் 25க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களின் படத்தில் நடித்திருக்கிறார். புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை மிகவும் விரும்புகிறவர். ஏ.வெங்கடேஷ், பேரரசு, ரமணா, மாதேஷ், ஜான் மகேந்திரன் உள்ளிட்ட பல புதுமுகங்களுக்கு அவர்தான் வாய்ப்பளித்தார். அழகிய தமிழ்மகன் என்ற தோல்வி படத்தை இயக்கிய பரதனைத்தான் தனது 60வது படத்தின் இயக்குனராக்கியிருக்கிறார்.


ரசிகர்களுடன் நெருக்கமானவர் : எப்போதும் ரசிகர்களை தனக்கு நெருக்கமா வைத்துக் கொள்வதில் விஜய் மாதிரி நடிகர்கள் இல்லை எனலாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியூர்களுக்கு சென்று மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பார். மாதம் ஒரு நாள் ஆயிரம் ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து விருந்து கொடுத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். “எனக்கு வெறும் ரசிகர்களாக மட்டும் இருந்து விடாதீர்கள். வீட்டுக்கு நல்ல மகனாவும் வாழ்ந்து காட்டுங்கள்” என்று அறிவுரை கூறி அனுப்பி வைப்பார். இதுவரையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது அதனை நேரில் சென்று வாழ்த்திவிட்டு வந்தார்.


விமர்சனங்களை ஏற்பவர் : விஜய் கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடிக்கிறார். விக்ரம், சூர்யா, கமல் போன்று வித்தியசமான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என்ற விமர்சனம் உண்டு. அதற்கு அவரது பதில் “நான் நல்ல நடிகன் என்று எப்போதும் சொன்னதில்லை. நல்ல எண்டர்டெய்னர். மக்களை சந்தோஷப்படுத்துவது மட்டுமே என் வேலை. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன்” என்பார். எந்த விமர்சனங்களையும் தாங்கிக் கொள்வார். எல்லாவற்றுக்கும் சின்ன சிரிப்புதான் பதில். அதனால் 60 படங்கள் தாண்டியும். 40 வயது தாண்டியும் நிதானமாக தன் பாதையில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.


பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்! வாசகர்களாகிய நீங்களும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்யலாம்.


Advertisement
நெருப்புடா...தீயாய் பரவும் கபாலி பாடல்கள் விமர்சனம்நெருப்புடா...தீயாய் பரவும் கபாலி ... விஜய்யை மாற்றிய திரைப்படங்கள் : பிறந்தநாள் ஸ்பெஷல் விஜய்யை மாற்றிய திரைப்படங்கள் : ...


வாசகர் கருத்து (81)

abraham - trichy,இந்தியா
22 ஜூன், 2016 - 15:09 Report Abuse
abraham happy birthday anna
Rate this:
vignesh - madurai  ( Posted via: Dinamalar Windows App )
22 ஜூன், 2016 - 14:03 Report Abuse
vignesh Happy birthday anna
Rate this:
M.Bakyalakshmi - chennai,இந்தியா
22 ஜூன், 2016 - 11:01 Report Abuse
M.Bakyalakshmi இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளையதளபதி Vijay. உங்கள் அனைத்து படங்களும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் புன்னகையுடன்.
Rate this:
j.karthik - vnr  ( Posted via: Dinamalar Android App )
22 ஜூன், 2016 - 10:32 Report Abuse
j.karthik happy birthday thalaiva
Rate this:
sharmila - dindugal  ( Posted via: Dinamalar Android App )
22 ஜூன், 2016 - 10:31 Report Abuse
sharmila Happy birthday anna God bless u.love u anna.
Rate this:
மேலும் 76 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in