மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
1989ம் ஆண்டு அனில் கபூர், ஜாக்கி ஷெரப் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் ‛ராம் லகான்'. இப்படத்தை இயக்குநர் ரோகித் ஷெட்டி இந்தக்காலத்திற்கு ஏற்றபடி ரீ-மேக் செய்ய இருப்பதாக நீண்ட நாட்களாகவே செய்தி வந்தது. ரோகித்தும் நேரம் வரும் போது ரீ-மேக் செய்வேன் என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது தான் இயக்கவில்லை என்று கூறியுள்ளார் ரோகித்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இப்படம் தொடர்பாக கூறியிருப்பதாவது... இயக்குநர் ரோகித் ஷெட்டி, ‛ராம் லகான்' படத்தை நாங்கள் பண்ணவில்லை. நானும், கரணும் வேறு ஏதாவது செய்யலாம் என்று எண்ணியுள்ளோம். விரைவில் அது எந்த மாதிரியான படமாக இருக்கும் என்று நாங்களே அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.