Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நெருப்புடா...தீயாய் பரவும் கபாலி பாடல்கள் விமர்சனம்

12 ஜூன், 2016 - 12:52 IST
எழுத்தின் அளவு:
kabali-songs-review

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், ஜான் விஜய், கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் கபாலி. இப்படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு முதலே இணையதளங்களில் வெளியிடப்பட்டன.

இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே பாடல்களின் சில வரிகளும், பன்ச் டயலாக்குகளும் இணையத்தில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தின.


நேற்று மாலை மிக எளிமையாக நடைபெற்ற விழாவில் படத்தின் இசையை தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் ரஞ்சித், ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா வெளியிட்டார்கள்.


நேற்று இரவு 9 மணி அளவில் யு டியூப் இளையதளத்தில் உலகம் ஒருவனுக்கா பாடலை முதலில் வெளியிட்டனர். தொடர்ந்து சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து அனைத்து பாடல்களையும் வெளியிட்டார்கள்.


ரஜினிகாந்த் ரசிகர்கள் வீட்டில் மட்டுமல்லாது இசை ரசிகர்கள் பலரது வீட்டிலும் கபாலி பாடல்கள் எப்படியிருக்கும் என்று கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஏற்கெனவே, சமூக வலைத்தளங்களில் கபாலி பாடல்களைப் பற்றிய கருத்துப் பரிமாற்றம் ஆரம்பமாகிவிட்டது.


கபாலி படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பாடல்களை கபிலன், உமாதேவி, விவேக், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் எழுதியுள்ளார்கள். பாடல்களைப் பாடியிருப்பவர்களும் இளம் பின்னணிப் பாடகர்கள், பாடகிகள்தான். ரஜினிகாந்த் படங்களில் வழக்கமாக நாம் கேட்கம் எஸ்பிபி, மனோ ஆகிய குரல்கள் இந்தப் படத்தில் இல்லை.


சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக அறிமுகமான சில வருடங்களிலேயே ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கக் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார்.


அதிரடி


1. நெருப்புடா...


பாடல் - அருண் ராஜா காமராஜ்


பாடியவர் - அருண் ராஜா காமராஜ்


ஏற்கெனவே டீசரில் இரண்டு கோடி பேருக்கும் மேல் ரசித்த நெருப்புடா...வார்த்தைகள் ரஜினி ரசிகர்களிடம் தீயாகப் பற்றிக் கொண்டது. படத்தின் தீம் இசையாகவும் இந்தப் பாடல்தான் இருக்கப் போகிறது. அனேகமாக படத்தில் ரஜினிகாந்தின் அறிமுகப் பாடலாகவும் இந்தப் பாடல் இருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம்.


காதல்


2. மாயநதி


பாடல் - உமாதேவி


பாடியவர்கள் - அனந்து, பிரதீப் குமார், ஸ்வேதா மோகன்


25 வருடங்கள் கழித்து சிறையிலிருந்து (?) திரும்ப வரும் ரஜினிகாந்திற்கும் அவருடைய மனைவியான ராதிகா ஆப்தேவுக்கும் இடையிலான காதல் பாடலாக இந்தப் பாடல் இருக்குமோ என்ற ஐயம் உள்ளது. தூய நரையிலும்...காதல் மலருதே... என்ற வார்த்தைகள் அதை உணர்த்துகிறது. படத்தில் உள்ள பாடல்களில் இனிமையான மெலடியாக இந்தப் பாடல் இருக்கிறது.


புகழ்


3. உலகம் ஒருவனுக்கா...


பாடல் - கபிலன், ராப் பாடல் - விவேக்


பாடியவர்கள் - அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா


கபாலியின் புகழைப் பரப்பும் ஒரு பாடலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இத்தனை நாளா கூட்டுக்குள்ளே, இனிமே வாரான் நாட்டுக்குள்ளே...எதிரி கூட்டம் ஆடிப்போச்சே...குருதியில் நெருப்புதான் கூடிப் போச்சே.. வரிகள் ரஜினி ரசிகர்களை கைத்தட்ட வைக்கும். அதே சமயம், நாங்க எங்க பிறந்தா, அட உனக்கென்ன போடா, தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா... வரிகள் சர்ச்சையைக் கிளப்பவும் வாய்ப்புண்டு.


அந்தக் காலத்தில் மன்னர்களைப் புகழ்ந்து பாடல் இயற்றி பொற்காசுகளைப் பரிசாகக் கவிஞர்கள் பெற்றதாக வரலாறு உண்டு. இந்த ராப் வரிகளை எழுதிய விவேக், ரஜினியிடமிருந்து தொடர்ந்து வாய்ப்புகளைப் பெறுவார் என்பது மட்டும் உறுதி. பிழைக்கத் தெரிந்த பாடலாசிரியர்.


பிரிவு


4. வானம் பார்த்தேன்...


பாடல் - கபிலன்


பாடியவர் - பிரதீப் குமார்


பிரிவின் சோகத்தை உச்சமாக வெளிப்படுத்தும் பாடல். பிரதீப் குமாரின் குரலில் அந்தச் சோகம் இயல்பாகவே ஒலிக்கிறது. மனைவியின் பிரிவை நினைத்து ரஜினிகாந்த் பாடும் பாடலாகவே, பின்னணிப் பாடலாகவே இந்தப் பாடல் இருக்கலாம். எங்கும் பார்த்தேன், உந்தன் பிம்பம்...கனவிலும் நினைவிலும்...தினம் தினம்...வருபவள்..எதிரினில்..இனி வர நேராதோ... பிரிவின் சோகத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான வரிகள்.


பெருமை


5. வீர துரந்தரா...


பாடல் - உமாதேவி


பாடியவர்கள் - கானா பாலா, லாரன்ஸ், பிரதீப் குமார்


கபாலியின் பெருமைகளை தமிழிலும், மலாய் மொழியிலும், ராப் வரிகளிலும் பறைசாற்றும் பாடல். Since the 80s untouchable , fighting for whats right என ஆங்கிலத்திலும் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களிடமும், தமிழ் தெரியாதவர்களிடமும் இந்தப் பாடல் ரஜினியை இன்னும் அதிகமாகக் கொண்டு போய்ச் சேர்க்கும்.


ரஜினிகாந்த் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டாரா என ஏங்கிய ரசிகர்களுக்கும், இளம் தலைமுறையினருடன் ரஜினி நடித்தால் எப்படி இருக்கும் என ஆச்சரியப்பட்டவர்களுக்கும் கபாலி பாடல்கள் நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.


இதுவரை வெளிவந்த ரஜினிகாந்த் படப் பாடல்களில் காலத்திற்கேற்ப மாறுபட்டு வந்திருக்கும் பாடல்கள்தான் கபாலி பாடல்கள்.


கபாலி பாடல்கள் - ரஜினி ரசிகர்களுக்கு நெருப்புடா... என பெருமைப்பட்டுக் கொள்ளலாம், படக் குழுவினருக்கு...மகிழ்ச்சி என கொண்டாடிக் கொள்ளலாம்.


Advertisement
கல்லா கட்டாத கோடை விடுமுறை : மே மாத திரைப்படங்கள் ஓர் பார்வைகல்லா கட்டாத கோடை விடுமுறை : மே மாத ... அபார வெற்றி, அமைதியான பயணம்: விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் அபார வெற்றி, அமைதியான பயணம்: விஜய் ...


வாசகர் கருத்து (33)

subramani kumar - chennai,இந்தியா
24 ஜூன், 2016 - 13:04 Report Abuse
subramani kumar அது சரி அவுங்க அவுங்க தலைவருங்க நடிக்கிற படம் எல்லாம் சூப்பரா, கொஞ்ச நாள்ல காணாம போறாங்க ,இத்தனை வருஷம் பீல்ட்ல நிக்கறாங்க பாரு அது .கருத்து சொல்லும் போது நாகரீகமா சொல்லணும் மத்தவங்க மனசு கஷ்டப்படும்படி சொல்லக்கூடாது ,நீங்க சொல்லும் கருத்தால் மத்தவங்க தன்னை திருத்திக்கணும் எரிச்சல் அடையக்கூடாது
Rate this:
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
13 ஜூன், 2016 - 19:03 Report Abuse
Neelaa ஆமாம்... தினமலரில் கருத்துப்பதிவு செய்யும் போது, முற்றுப்புள்ளி டைப் அடித்தாலும், ஏன் பதிவாவது இல்லை?? உங்களில் யாருக்கேனும் இதே பிரச்சினை இருக்கிறதா?
Rate this:
K.VINOTHKUMAR - TIRUPUR,இந்தியா
13 ஜூன், 2016 - 16:49 Report Abuse
K.VINOTHKUMAR லிங்காவ விட நல்லா தான் இருக்கு மேல போற்றுருக்க அளவுக்கு சூப்பர் இல்ல கீழ கமெண்ட் அடிக்கிற அளவுக்கு மோசம் இல்ல சந்தோஷ் நாராயணன் பாடல்கள் போலத்தான் இருக்குது ஏ ஆர் ர அளவுக்கு எதிர் பாத்தா இப்டித்தான் இப்போ அவர் பாடல் களே நம்ம கமெண்ட் அடிக்கிறோம் ஒரு எங் பட்டாளம் எதோ ரஜினி சார் aah வச்சு இந்த அளவுக்கு எதிர் பக்க வச்சதுக்கே பாரட்டனும் நம்ம எதிர் பாத்துட்டு அந்த அளவுக்கு இல்லேன இந்தளவுக்கு தாளிக்காதிங்கபா
Rate this:
Parthiban V - Tamilnadu,இந்தியா
13 ஜூன், 2016 - 12:13 Report Abuse
Parthiban V பாடல்கள் அனைத்தும் கேட்க நன்றாக இருக்கிறது. படத்தில் பார்க்கும் போது இது இன்னும் நன்றாக இருக்கும்.
Rate this:
Blue Print - Chennai,இந்தியா
13 ஜூன், 2016 - 12:00 Report Abuse
Blue Print பாரம்பரியப்படி முதல் பாடலை SPB பாடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film GajiniKanth
  • கஜினிகாந்த்
  • நடிகர் : ஆர்யா
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
  Tamil New Film Junga
  • ஜூங்கா
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :கோகுல்
  Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in