டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன் நடித்த சரைய்னொடு திரைப்படம் 115க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாட்களை நெருங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆந்திராவில் ரூ 71 கோடிக்கும் அதிகமாக வசூலித்த சரைய்னொடு திரைப்படம் கேரள வசூலையும் சேர்த்து ரூ 125 கோடியை தாண்டியுள்ளது. சரைய்னொடு படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் அல்லு அர்ஜூன், தனது மனைவி சினேகா மற்றும் மகன் அயனுடன் துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு துருக்கி நாட்டு சுல்தான் உடையில் அல்லு அர்ஜூனும் சுல்தானா உடையணிந்து சினேகா ரெட்டியும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை அல்லு அர்ஜூன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மனைவியுடன் கம்பீரமான சுல்தானாக தோன்றும் அல்லு அர்ஜூனின் அப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகின்றது.