'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை வித்யா பாலன் முதல் முறையாக ஏக் அல்பெலா என்ற மராத்தி மொழி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 24ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், பாகிஸ்தானி படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஏற்கனவே இரண்டு முறை அது போன்ற வாய்ப்புக்கள் எனக்கு வந்தன. அது கதை அடிப்படையிலானது. நான் பாகிஸ்தானி படங்களை பார்ப்பதுண்டு. போல் என்ற படம் பார்த்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காமோஷ் பானி படத்தை இதுவரை பார்க்கவில்லை. ஆனால் அது மிக நல்ல படம் என எனக்கு தெரியும். உலகின் எந்த மூலையிலும் சென்று வெளிப்படையாக நடிக்க நான் தயாராக உள்ளேன். இதுவரை பாகிஸ்தானி பட இயக்குனர்கள் யாரையும் நான் சந்திக்கவில்லை. ஆனால் இருமுறை எனக்கு போன் செய்துள்ளார்கள். அவர்கள் நான் அவர்களின் கதையில் நடிக்க வேண்டும் என விரும்புவதாக கூறினர் என்றார்.