தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. இந்த படத்தில் இதுவரை பார்த்த ரஜினியை பார்க்க முடியாது. வித்தியாசமான தோற்றத்தில் குறிப்பாக உலக தரத்தில் அவரது கேரக்டரும், பர்பாமென்சும் வெளிப்பட்டிருப்பதாக அந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர் நடிகைகள் கூறுகிறார்கள். அதோடு, சண்டை காட்சிகளில் எனர்ஜிடிக்கான ரஜினியை பார்க்கலாம். அதனால் முந்தைய ரஜினி படங்களை விடவும் வெளிநாடுகளிலும் இந்த கபாலிக்கு பெரிய வரவேற்பு கிடைக் கும் என்கிறார்கள்.
இந்தநிலையில், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் கபாலியை வெளியிடும் ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டி ருக்கிறது. மேலும் ஜூலை1-ந்தேதி கபாலி வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அப்படத்தின் தெலுங்கு உரிமை 32 கோடிக்கு விற்பனையாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு ஐ படம்தான் தெலுங்கில் 27 கோடிக்கு விற்பனையாகி முதலிடத்தில் இருந்தது. ஆனால் இப்போது கபாலி 32 கோடிக்கு விற்பனையாகி முதலிடம் பிடித் துள்ளது.