தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்டகத்தியில் அறிமுமான நந்திதா இப்போது நந்திதா ஸ்வேதா. காரணம் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அங்கு ஏகப்பட்ட நந்திதாக்கள் இருப்பதால் இந்த பெயர் மாற்றம்.
தமிழில் 'அப்புச்சி கிராமம்' படத்தை இயக்கிய வி.ஆனந்த் இயக்கும் தெலுங்கு படத்தில் நந்திதா அறிமுகமாகிறார். நிகில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். இதுவரை நடித்திராக கேரக்டரில் நடிக்கிறார். அதாவது தமிழில் அடக்க ஒடுக்கமாக நடித்தவர் அங்கு கொஞ்சம் கிளாமராக நடிக்கிறார். ஸ்டைலிஷான, போல்டான பெண்ணாக நடிக்கிறார். அப்படி என்றால் கிளாமர் இருக்கத்தானே செய்யும். முதல் ஷெட்யூல் தான் முடிந்திருக்கிறது. அதற்குள் ஏகப்பட்ட தெலுங்கு வாய்ப்புகள் வரிசை கட்டுகிறதாம் நந்திதாவுக்கு.
இதுதவிர தற்போது தமிழில் 'உள்குத்து' படத்தில் தினேசுடன் நடித்து முடித்திருக்கிறார். செல்வராகவன் இயக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஆக்ஷன் ஹீரோயினாக வருகிறார். கயிற்றில் தொங்கியபடி சண்டையெல்லாம் போடுகிறாராம். நெஞ்சம் மறப்பதில்லை நந்திதாவின் இன்னொரு முகத்தை காட்டும் என்கிறார்கள்.