ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள அ.ஆ எனும் திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள இளம் நாயகன் நிதின் விரைவில் திரைக்கு வரும் அப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிதினும் ஆறுதல் வெற்றியாக அ.ஆ திரைப்படம் இருக்குமா என பதட்டத்தில் இருக்கும் நிதினுக்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தனது பண்ணை வீட்டில் விளைந்த மாம்பழங்களை நிதினுக்கு அனுப்பியுள்ள பவன் கல்யாண் அ.ஆ திரைப்படம் வெற்றி அடைய வாழ்த்துகளையும் கூறியுள்ளார். இதனால் உற்சாகமடைந்த நிதின் இத்தகவலை புகைப்படத்துடன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
மாம்பழ சீசனில் தனது தோட்டத்து மாம்பழங்களை தனக்கு பிரியமானவர்களுக்கு அனுப்புவதை பவன் கல்யாண் வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2015ல் சர்தார் கப்பார் சிங் படத்தின் இயக்குனர் பாபிக்கு மாம்பழங்கள் அனுப்பிய பவன் கல்யாண் அதற்கு முந்தைய வருடம் நிதினுக்கு மாம்பழங்கள் அனுப்பினார். தற்போது மீண்டும் மாம்பழங்களை அனுப்பியுள்ளார்.