'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இது என்ன மாயம், ரஜினி முருகன் என இதுவரை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இரண்டு படங்கள்தான் ரிலீஸாகியிருக்கின்றன. அவர் கதாநாயகியாக நடித்த பாம்புசட்டை படம் இன்னும் வெளியாகவே இல்லை. பாம்பு சட்டை வெளியாகாததினாலும், இது என்ன மாயம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் பல மாதங்கள் கிடப்பில் கிடந்து வெளியானதாலும் கீர்த்தி சுரேஷை ராசியில்லாத நடிகையாக கருதியது திரைப்படத்துறை.
ஆனால், ராசியில்லாத நடிகை என தன் மீது படிந்த முத்திரையை துடைத்து தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தனுஷுடன் 'தொடரி', சிவகார்த்திகேயனுடன் 'ரெமோ' படங்களில் நடித்து முடித்துவிட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது விஜய்யுடன் 'விஜய் 60' படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் கீர்த்தி.
இதற்கிடையில், பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடிக்கும் தொடரி படத்திற்கான டப்பிங்கை நேற்று முடித்துக் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தில் சரோஜா என்ற 'டச்அப்' பெண்ணாக அவர் நடித்திருக்கிறார். அதே படத்தில் 'பூச்சியப்பன்' கேரக்டரில் நடிக்கும் தனுஷ் சமீபத்தில் டப்பிங்கை ஒரே நாளில் பேசி முடித்துள்ளார். டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'தொடரி' படத்தின் பாடல்கள் ஜூன் 6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.