பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
'ரோமியோ ஜூலியட்' படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவி, லக்ஷ்மண் கூட்டணியில் உருவாகி வரும் படம் போகன். இதில் ஜெயம் ரவியுடன் தனி ஒருவனில் வில்லனாக வந்து அசத்திய அரவிந்த்சாமியும் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஹீரோயின்களாக ஹன்சிகா, அக்ஷ்ரா கவுடா நடிக்கிறார்கள். 'போகன்' படத்தில் ஜெயம் ரவி போலீஸ் ரோலில் நடிப்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.
இந்நிலையில் இப்போது அரவிந்த்சாமியும் இந்தப்படத்தில் போலீஸ் ரோலில் நடிக்க இருக்கிறார். ஜெயம் ரவியும், அரவிந்த்சாமியும் போலீஸ் ரோலில் இருப்பது போன்ற போட்டோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. போகன் படத்தில் அரவிந்த்சாமியின் ரோல் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் நிறைந்த ரோலாக இருக்கும் என்று இயக்குநர் லக்ஷ்மண் கூறியுள்ளார். தற்போது போகன் படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக பிரான்ஸ் செல்ல உள்ளார்கள்.