தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்த படம் ஹிட் கத்தி. இப்படம் தற்போது தெலுங்கில் ரீ-மேக் ஆக உள்ளது. இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கு தவிர கத்தி படம் ஹிந்தியிலும் ‛இக்கா என்ற பெயரில் ரீ-மேக் ஆக இருக்கிறது. இதில் அக்ஷ்ய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அடுத்தாண்டுக்கு தள்ளிப்போய் உள்ளது. கத்தி படத்தின் கதை நன்றாக இருக்கிறது. இருந்தாலும் அதை பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்றபடி மாற்றம் செய்யும்படி அக்ஷ்ய் கூறியிருப்பதாகவும் அதனால் ‛இக்கா படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு மத்தியில் துவங்கும் என்று கூறப்படுகிறது.