‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
'பிரியாணி', 'அலெக்ஸ் பாண்டியன்', 'சகுனி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என தொடர் தோல்விகளுக்கு பிறகு கார்த்திக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது 'கொம்பன்'. அதன் பிறகு வெளியான 'தோழா' படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த நிலையில் தான் கார்த்தியின் 'காஸ்மோரா' படம் அடுத்து வெளிவர இருக்கிறது.
இதில் கார்த்தி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஸ்ரீதிவ்யா இன்னொரு ஜோடியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இது பேண்டசி கலந்த சமூக படம். கார்த்திக்கு இதில் 3 கெட்அப் அதில் ஒன்றில் மொட்டைத் தலையுடன் நடித்திருக்கிறார். அதனால்தான் சில காலமாக தலையில் தொப்பியுடன் திரிகிறார்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அரங்கம் அமைத்து தான் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை நகரைச் சுற்றியும், ஐதராபாத்திலும் 15 பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தில் 15 நிமிடங்களுக்கு மோசன் கேப்சர் முறையில் உருவாக்கப்பட்ட அனிமேஷன் காட்சிகள் இடம்பெறுகிறது. தற்போது படப்படிப்பிடிப்புகள் முடிந்து, பின்னணி இசை கோர்ப்பு, டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இதன் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த இருக்கிறார்கள்.
ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்கள். 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி படங்களிலேயே ஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் இதுதான். 'காஸ்மோரா'வின் வெற்றி கார்த்திக்கு மட்டுமல்ல அதன் தயாரிப்பாளர்களுக்கும் முக்கியமானதாகும்.