ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நட்சத்திர தம்பதிகளான ரியாஸ்கான், உமா ரியாஸின் மூத்த மகன் ஷாரிக்கான். அலைகள் ஓய்வதில்லை கமலா காமேஷின் பேரன். 'பென்சில்' படத்தில் வில்லனாக நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார். பெற்றோர்களின் தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகமாக இருந்த ஷாரிக், வில்லனாக அறிமுகமானது குறித்து கூறியதாவது:
எனது பள்ளி நாட்களில் இருந்தே எனக்கு சினிமா மீதும் அதை படமாக்கும் கேமரா மீதும் அளவு கடந்த ஈர்ப்பு உண்டு. இங்கிலீஷ், கொரியன் என தரம் வாய்ந்த பிற மொழி சினிமாவை அதிகமாக ரசித்து பார்ப்பேன். 'பென்சில்' படத்தின் இயக்குனர் மணி நாகராஜ் என்னுடைய புகைப்படங்களை பேஸ்புக்கில் பார்த்து எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார். முதலில் சிறிய தயக்கம் இருந்தாலும், என் பெற்றோர்கள் கொடுத்த ஊக்கம் எனக்கு தைரியத்தையும் மன உறுதியையும் வழங்கியது. முதலில் அவர்களுக்கே நான் வில்லனாக நடிப்பதில் உடன்பாடு இல்லை, ஆனால் கதையை கேட்ட பிறகு, எனது கதாப்பாத்திரத்தின் முக்கியதுவத்தை உணர்ந்து ஒத்துக் கொண்டனர்.
என்னை பொறுத்தவரை ஹீரோ, வில்லன் என்றெல்லாம் நடிப்பை பிரித்து பார்க்க முடியாது. நடிப்பை நடிப்பாக பார்கிறேன். தற்போது தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் முன்னணி கதாநாயகர்கள் அனைவரும் வில்லனாக இருந்து வெற்றி கண்டவர்கள் தான். அந்த வகையில் நான் இந்த பென்சில் படம் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளேன் என்பதை நினைக்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறேன் என்கிறார் ஷாரிக்.