பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தங்கமகன். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. தனுசுக்கு ஜோடியாக சமந்தா, எமிஜாக்சன் நடித்திருந்த அந்த படம் தனுசுக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்தது. அதையடுத்து தொடரி, கொடி படங்களில் நடித்து வந்தார். இதில் பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்துள்ள தொடரி சில மாதங்களுக்கு முன்பே இறுதிகட்ட பணிகள் நடந்து முடிந்து விட்ட நிலையில், படத்தை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும என்று நேரம் பார்த்து வந்த பிரபுசாலமன், ஜூன் மாதம் இறுதியில் அந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.
மேலும், அந்த படத்திற்கு பிறகு தனுஷ் நடித்து வந்த கொடி படமும் கிட்டத் தட்ட ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதனால் இந்த படத்தை ஜூலையில் வெளியிடப்போகிறார்களாம். அதோடு, கெளதம்மேனன் இயக்கத்தில் நடித்து வரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வரும் தனுஷ், ஜூன் மாதம் அப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்து விட்டு கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க செல்வார் என்கிறார்கள். ஆக, செப்டம்பர் அல்லது அக்டோபரில் அந்த படமும் திரைக்கு வருகிறதாம். அந்த வகையில், இந்த 2016ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் 3 படங்கள் திரைக்கு வருகிறது.