ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
படப்பிடிப்பு தளங்களில் ஓய்வாக இருக்கும்போது சிலர் கேரவனுக்குள் சென்று ஓய்வெடுப்பார்கள். ஆனால் பல இளவட்ட நடிகர் நடிகைகள் வெளியில் கூட்டமா க அமர்ந்தபடி ஜாலி அரட்டையடித்துக்கொண்டிருப்பார்கள். அந்த வகையில், ஆர்யா ஒரு செட்டிற்குள் இருக்கிறார் என்றால், அங்கே கலகலப்புக்கு பஞ்சமிருக் காது. அதே படத்தில் நடிக்கும் நடிகைகளை ஏதாவது வம்புக்கு இழுத்து கேலி கிண்டல் செய்து கொண்டிருப்பார். தன்னுடன் மற்ற நடிகர்களையும் அவர் சேர்த்துக்கொண்டு கிண்டல் செய்வதால் நடிகைகள் விட்டால் போதுமென்று ஓடி ஒழிப்பார்கள்.
ஆனால் சமீபகாலமாக படங்களின் தொடர் தோல்வி காரணமாக ஆர்யாவிடத்தில் நிறைய மாற்றங்கள். அதனால அவர் கிட்டத்தட்ட அரட்டையை விட்டு ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் அவர் விட்ட அரட்டையரங்கத்தை பாபி சிம்ஹா தொடர்ந்து வருகிறார். இவரும் ஆர்யாவை மாதிரிதான் ரொம்ப ஜாலியான மனிதர். படப்பிடிப்பில் நடிக்கிற நேரம்போக மற்ற நேரங்களில் கலகப்புக்கு பஞ்சம் வைக்க மாட்டார். அதனால் பாபி சிம்ஹா ஸ்பாட்டுக்குள் என்ட்ரி ஆகிறார் என்றாலே, அடுத்த ஆர்யா வருகிறார் என்று நடிகர் நடிகைகள் கிசுகிசுக்கிறார்களாம்.