600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கோலிவுட்டின் சில குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர். நான் ஹாலிவுட் படங்களைதான் பார்ப்பேன். ஹாலிவுட் கதைகளைத்தான் படிப்பேன் என்பார். அதோடு, எனக்கு பிடிக்காத விசயமே குத்துப்பாட்டுத்தான் என்பார். ஆனால் அவர் படங்களில் குத்துப்பாட்டுக்கள் இடம்பெறும். அதோடு சூப்பர் ஹிட்டும் ஆகும். அதுபற்றி கேட்டால், இந்த பாட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் வைத்தேன் என்று சொல்லுவார்.
இப்படி சொல்லும் மிஷ்கின், சில நல்ல படங்களையும் கொடுத்திருக்கிறார். அதில் அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், பிசாசு ஆகிய படங்களை தற்போது புத்தக வடிவில் வெளியிட்டுள்ளார் அவர். அந்த புத்த கத்தை நேற்று முன்தினம் மதுரையில் வெளியிட்டுள்ளார். இந்த விழாவில் மிஷ்கினுடன் கபாலி டைரக்டர் ரஞ்சித்தும் கலந்து கொண்டுள்ளார். தரமான படம் எடுப்பது எப்படி? என்பதை இளம் இயக்குனர்களுக்கு தெரியப்படுத்தவே இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளாராம் மிஷ்கின்.