ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரண்மனை - 2 படத்துக்குப் பபிறகு சுந்தர்.சி. நடித்துள்ள படம் - 'முத்தின கத்திரிக்கா'. இந்தப் படத்தில் சுந்தர்.சிக்கு ஜோடியாக, பூனம் பஜ்வா நடிக்க, சுந்தர்.சியின் சிஷ்யர் வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'வெள்ளி மூங்கா' படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது வயதைக் கடந்தும் இன்னும் திருமணமாகாத கதாநாயகனைக் குறிக்கும் வகையில் 'முத்தின கத்திரிக்கா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இது அரசியல் கலந்த நகைச்சுவை படம்.
வைபவ், சதீஷ், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முத்தின கத்தரிக்கா படத்தை பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் 'முத்தின கத்திரிக்கா'வுக்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். யு சான்றிதழ் கிடைத்தால் உடனடியாக வரிவிலக்கும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் முத்தின கத்திரிக்கா படத்தை ஜூன் மாதம் 10-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. இவரது தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த ஹலோ நான் பேய் பேசுறேன் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது. அதனால் முத்தின கத்தரிக்கா படத்துக்கும் நிறைய தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.