பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
அரவிந்த்சாமி நீண்ட இடைவெளிக்கு பிறகு 'தனி ஒருவன்' படத்தில் ஸ்டைலிஷான வில்லன் கேரக்டரில் நடித்தார். அதேபோன்ற ஒரு ஸ்டைலிஷான வில்லன் கேரக்டரில் கன்னட படம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். 'சாந்து ஸ்ட்ரைட் பார்வேர்ட்' என்ற இந்தப் படத்தை மகேஷ் ராவ் இயக்குகிறார். யாஷ் ஹீரோவாகவும், ராதிகா பண்டிட் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். மஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிக்கிறார். ஹரி கிருஷ்ணா இசை அமைக்கிறார், ஆண்ட்ரீவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழில் கடைசியாக 'புறம்போக்கு' படத்தில் ஸ்ட்ரைட் பார்வேர்ட் போலீஸ் அதிகாரியாக நடித்த ஷாம். இதில் ஸ்டைலிஷான வில்லன். ஷாம் ஏற்கெனவே 'தனனனம் தனனனம்' என்ற கன்னட படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் 'கேம்' என்ற கன்னட படத்தில் நடித்து அங்கு அனைவருக்கும் தெரிந்த நடிகராகிவிட்டார். அந்தப் படம் 'ஒரு மெல்லிய கோடு' என்ற பெயரில் தமிழில் வெளிவர இருக்கிறது. இது தவிர தமிழில் 'காவியன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.