'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அமிதாப்பச்சன், நவாசுதீன் சித்திக், வித்யாபாலன் நடித்துள்ள படம் 'டிஇ3என்'. இது ஒரு மர்டர் மிஸ்ட்ரி படம். இந்த படத்தில் அமிதாப்பச்சன் நீல நிற பழங்கால ஸ்கூட்டரில் தான் பயணிப்பார். படத்தின் டீசருக்கு பிறகு அமிதாப்பச்சனின் ஸ்கூட்டருக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டர் கோல்கட்டா அருகே உள்ள டோலிகல்ஜ் பகுதியை சேர்ந்த சுஜித் நாராயணன் என்பவருக்கு சொந்தமானது. அவர் பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் ஒரு வியாபாரி. அவரிடம் மட்டுமே படத்துக்கு தேவையான நீல நிற ஸ்கூட்டர் இருந்தது. அதை வாங்கி பயன்படுத்தி உள்ளனர்.
இப்போது ஸ்கூட்டர் பாப்புலராகிவிட்டதால் அதனை சுஜித்திடம் சிலர் ஒரு கோடி வரை தருவதாக கூறி ஸ்கூட்டரை கேட்டுள்ளனர். ஆனால் சுஜித் தர மறுத்துவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அது 20 வருட பழமையான ஸ்கூட்டர். நான் 13 வருடங்களுக்கு முன்பு வாங்கினேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தால் அதனை விற்காமல் நானே பயன்படுத்தி வந்தேன். அமிதாப்ஜி பயன்படுத்திய பிறகு ஒரு கோடி ரூபாய்கு கேட்டார்கள் தர மறுத்து விட்டேன். அமிதாப்ஜி ஸ்கூட்டருடன் இருக்கும் ஆளுயர படத்துடன் இந்த ஸ்கூட்டரையும் எனது நிறுவனத்தில் காட்சிக்கு வைக்க இருக்கிறேன் என்றார்.