தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களின் வெற்றிக்குப்பிறகு பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார் இசை யமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அந்த வகையில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, புருஸ்லீ படங்களில் நடித்து வருபவர், இந்த படங்களைத் தொடர்ந்து ராஜேஷ்.எம் இயக்கும் கடவுள் இருக்கான் குமாரு மற்றும் ராஜீவ்மேனன், எழில் ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறார்.
இதுமட்டுமின்றி பல டைரக்டர்களிடம் அவர் கதை கேட்டு வைத்துள்ளார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கதை கேட்பதுதான் அவரது முக்கிய வேலையாக உள்ளது. ஆக, தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், அடுத்து 4 படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அந்த வகையில், விஜயசேதுபதியை அடுத்து ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் நடிகர் பட்டியலில் இடம்பெறப்போகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.