ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி |
நாணி நடிப்பில் ஜூன் மாதத்தில் வெளிவரவுள்ள ஜென்டில்மேன் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இப்படத்தில் வில்லத்தனமான நாயகன் வேடத்தில் நாணி நடித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. திரில்லர் திரைப்படமான ஜென்டில்மேன் படத்தை அடுத்து நாணி குடும்பகதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கவுள்ளாராம். இயக்குனர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் நாணி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். மாறுபட்ட கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் நாணி வழக்கமான தெலுங்கு மசாலா படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அஷ்டசெம்மா படப்புகழ் இயக்குனர் மோகன கிருஷ்ணா இயக்கியுள்ள ஜென்டில்மேன் படத்தில் நாணியுடன் சுரபி மற்றும் நிவேதா தாமஸ் நடித்துள்ளனர். ஜென்டில்மேன் படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் நாணி நடிக்கும் அடுத்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் துவங்கும் என தெரிகிறது.