தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மெட்ராஸ் படத்துக்கு கிடைத்த வரவேற்பை வைத்து, தமிழில், நம்பர் ஒன் நடிகையாகி விடுவோம் என கணக்கு போட்டிருந்தார், கேதரீன் தெரசா. ஆனால், அதைத் தொடர்ந்து, அவர் நடிப்பில் வெளியான, கணிதன் உள்ளிட்ட படங்கள், தோல்வியை சந்தித்ததால், துவண்டு போயிருந்தார். இப்போது, அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆர்யா ஜோடியாக, கடம்பன் என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் கேதரீன். மெட்ராஸ் படத்துக்கு பின், மீண்டும் முன்னணி நடிகரின் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், உற்சாகத்தில் இருக்கிறார் அவர். இந்த படத்தை தொடர்ந்து, அதிக வாய்ப்புகள் தனக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடனும் இருக்கிறார்.