ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினி முருகன் படத்தை முடித்த கையோடு ரெமோ படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதனால், இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களை விட இப்படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது.
தற்போது அப்பட வேலைகள் முடிந்ததை அடுத்து மோகன்ராஜா இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும், இதுவரை ஒரு படத்தில் நடித்து முடித்ததும் அடுத்த படம் என்கிற ரீதியில் செயல்பட்டு வந்த இவர், தற்போது சில நடிகர்கள் ஒரே நேரத் தில் பல படங்களில் நடிப்பதைப்பார்த்து, தனது வேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளார்.
அதாவது, மோகன்ராஜா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கும் படம், இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க கால்சீட் கொடுத்துள்ள சிவகார்த் திகேயன், அதைத் தொடர்ந்து நடிக்க மேலும் சில கதை களையும் ஓகே செய்து வைத்திருக்கிறார்.