தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரெமோ'வின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அனிருத் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் ரெமோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதம் 9-ஆம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து ரெமோ படத்தின் பாடல்களை ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இசைவெளியீடு ஜூன் மாதம் முடிந்தாலும், ரெமோ படத்தை இரண்டு மாதங்கள் கழித்து அதாவது செப்டம்பர் மாதம் தான் வெளியிட உள்ளனர். லேட்டஸ்ட் தகவலின் படி செப்டம்பர் 9-ஆம் தேதி ரெமோவை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார். இரண்டு மாத காத்திருப்பு ஏன்? எல்லாம் சென்ட்டிமெண்ட்தான்.
ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் செப்டம்பரில்தான் வெளியானது. படமும் வெற்றியடைந்தது. எனவே 'ரெமோ' படத்தையும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லிவிட்டாராம் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் செப்டம்பர் சென்ட்டிமெண்ட் ரெமோ படத்தை கரை சேர்க்குமா பார்ப்போம்.