‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தமிழ் தவிர மற்ற இரண்டு மொழிகளிலும் நடிப்புடன் கூடிய கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார். படங்களில் மட்டுமல்லாது சில ஆங்கில இதழ்களின் அட்டை பக்கத்தில் கவர்ச்சியாகவும் போஸ் கொடுக்கிறார். சமீபத்தில் கூட ஒரு ஆங்கில இதழின் அட்டை பக்கத்தில் ஸ்ருதியின் கவர்ச்சி படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், இதுப்பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ''நடிகைகள் கவர்ச்சியை மட்டும் நம்பி சினிமாவில் நீடிக்க முடியாது. கவர்ச்சியுடன் கூடிய திறமையும் வேண்டும். நான் கவர்ச்சியாக இருக்கிறேன், அதனால் எல்லோருக்கும் கவர்ச்சியாக தெரிகிறேன். புதுமையாக யோசிப்பது கூட கவர்ச்சி தான். கவர்ச்சியில் ஒரு எல்லை வைத்திருக்கிறேன், அதை கண்டிப்பாக மீற மாட்டேன், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப முக்கியத்துவம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
ஸ்ருதிஹாசன், தற்போது தன் அப்பா கமலின் 'சபாஷ் நாயுடு', சிங்கம் மூன்றாம் பாகமான எஸ்-3 மற்றும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.