ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வரும் அக்ஷ்ய்குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'ஹவுஸ்புல்-3'. இப்படம் வருகிற ஜூன் 3ம் தேதி ரிலீஸாகிறது, இதையொட்டி அக்ஷ்ய்குமார் உள்ளிட்ட 'ஹவுஸ்புல்-3' படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புரமோஷன் ஒன்றில் பங்கேற்ற அக்ஷ்ய்குமாரிடத்தில் ப்ரியங்கா, தீபிகா போன்றோர் எல்லாம் ஹாலிவுட்டில் நடித்து வருகிறார்கள், நீங்கள் ஏன் ஹாலிவுட் செல்லவில்லை என்று கேட்கப்பட்டது, அதற்கு அக்ஷ்ய், ஹாலிவுட் நமக்கு சரிப்பட்டு வராது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அக்ஷ்ய் குமார் மேலும் கூறியுள்ளதாவது... ''யாரும் என்னை ஹாலிவுட்டிற்கு அழைத்து செல்லவில்லை, ஹாலிவுட்டிற்கு எல்லாம் நான் செட்டாக மாட்டேன். ஒருவேளை அப்படியே ஹாலிவுட் வாய்ப்பு வந்தாலும் வெறும் 5 நிமிடக்காட்சிகளில் தான் நம்மை காண்பிப்பார்கள், ஆகவே இப்போது நான் நடித்து வரும் பாலிவுட் படங்களே எனக்கு மகிழ்ச்சியை தருகிறது'' என்று கூறியுள்ளார்.