ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரேஸ் குர்ராம், S/O சத்யமூர்த்தி போன்ற படங்களில் வெற்றி கண்ட அல்லு அர்ஜூன் அடுத்து நடித்த சரித்திர திரைப்படம் ருத்ரமாதேவி ஹிட் வரிசையில் இடம் பிடிக்கவில்லை என்றாலும் அல்லு அர்ஜூனின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. அப்படத்திற்கு பின்னர் அவர் நடித்த சரைய்னொடு திரைப்படமும் அல்லு அர்ஜூன் வெற்றி படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது.
இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராகுல் ப்ரீத்தி சிங், கேத்ரின் திரைஷா மற்றும் பலர் நடித்த இப்படத்தை அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நல்ல வசூலை பெற்றுள்ளது. அண்மையில் சரைய்னொடு படத்தின் வசூல் விவரங்களை டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட அல்லு அர்ஜூன் இப்படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.