பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாலிவுட்டின் இளம் நடிகை ஆலியாபட். இவர் 'உத்தா பஞ்சாப்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் ஷாகித் கபூர், கரீனா கபூர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இதில் ஷாகித்கபூர், போதைக்கு அடிமையான ராக்ஸ்டாராகவும், கரீனா டாக்டராகவும், தில்ஜித் போலீஸாகவும், ஆலியா, பீகாரை சேர்ந்த ஹாக்கி வீராங்கனையாகவும் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ஆலியாவின் ரோல் பற்றி இன்னொரு விஷயமும் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது படத்தில் ஆலியாவை சில நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய, அதில் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும், பின்னர் அதை எதிர்த்து போராடும் பெண்ணாகவும் ஒரு பவர்புல் வேடத்திலும் நடிக்க இருக்கிறாராம். 'உத்தா பஞ்சாப்' படத்தை அபிஷேக் செளபே இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. அடுத்தமாதம் ஜூன் 17ம் தேதி படம் ரிலீஸாகிறது.