ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை த்ரிஷாவுக்கு அரண்மணை படத்தில் பேயாக நடித்ததில் இருந்து பேய் ஆர்வம் அதிகமாகிவிட்டது. அவரது மானேஜர் கிரி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாரிக்கும் நாயகி என்ற படத்தில் பேயாக நடிக்கிறார். அதுவும் இரண்டு வேடங்களில் 80களில் வாழ்ந்த ஒரு நடிகையாகவும், தற்போதைய சாதாரண பெண்ணாகவும் நடிக்கிறார்.
இந்த நிலையில் விஜய் நடித்த மதுர படத்தை இயக்கிய மாதேஷ், நீண்ட இடைவெளிக்கு பிறகு த்ரிஷா நடிப்பில் ஒரு பேய் திகில் படத்தை இயக்க இருக்கிறார். இதிலும் த்ரிஷா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். முற்பிறவியில் தமிழ்நாட்டில் பிறக்கும் த்ரிஷா வாழ்க்கையை ஒரு கும்பல் நாசமாக்குகிறதாம். இந்த பிறவியில் அப்படி நாசம் செய்தவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்கிறார்கள். மீண்டும் பிறக்கும் த்ரிஷா அவர்களை தேடிச் சென்று எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் கதையாம்.
இதன் படப்பிடிப்புகள் லண்டன், மெக்சிகோ, ஜெனிவா, பல்கேரியா, ரொமானியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் நடக்கிறது. சிங்கம் படத்தை தயாரித்த பிரின்ஸ் புரொடக்ஷன் லக்ஷ்மண் தயாரிக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார் விவேக் மெர்வின் இசை அமைக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்புகள் துவங்குகிறது.