பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் ஹிருத்திக்- நடிகை கங்கனா இடையேயான சட்ட ரீதியிலான சண்டை தான் தற்போது பாலிவுட் முழுவதும் பேச்சாக உள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அக்ஷை குமாரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர், நாங்கள் இதனை முடிக்க நினைக்கிறோம். மீடியாக்களுக்கும் இதில் உருதுணையாக இருக்க வேண்டும். விரைவில் இது முடிவுக்கு வரும் என நம்புகிறேன். ஹிருத்திக்கும், கங்கனாவும் சண்டையை நிறுத்த முன்வர வேண்டும் என விரும்புகிறேன் என்றார். இருந்தும் இவர்களின் சண்டை உச்சகட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹிருத்திக்கும், அக்ஷையும் ஒரே கட்டிடத்தில் தான் வசித்து வருகிறார். இது தொடர்பாக இருவரும் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.