இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் யார் என்று தமிழ் ரசிகர்களுக்கு இப்போது நன்றாகவே தெரிந்திருக்கும். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' படத்தில் அக்ஷய் குமார் வில்லனாக நடித்து வருகிறார். தென்னிந்தியத் திரைப்படங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் அக்ஷய் குமார். தமிழ், தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற படங்களின் ஹிந்தி ரீமேக்குகளில் நடித்து அங்கும் பெரிய வெற்றி பெற்றார்.
ஏற்கனவே விஜய் நடித்த 'துப்பாக்கி' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'ஹாலிடே' படத்தில் நடித்தார். விரைவில் 'கத்தி' படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்க உள்ளார். இதனிடையே விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'தெறி' படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கும் முயற்சியில் இறங்கிவிட்டாராம்.
சில வெளிநாடுகளில் அக்ஷய் குமார் நடித்து வெளிவந்த 'ஏர்லிப்ட்' படத்தை விட 'தெறி' படத்தின் வசூல் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்ஷய் குமாரின் பட நிறுவனத்தினர் 'தெறி' தயாரிப்பாளருடன் பேசி வருகிறார்களாம். விரைவில் அது பற்றிய பேச்சு வார்த்தை முடிந்ததும் அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.