ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரேமம் படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் அ.ஆ எனும் தனது முதல் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் சமந்தா நிதின் ஜோடி சேர்ந்து நடித்துள்ள அ.ஆ படத்தில் அனுபமா பரமேஸ்வரன் எதிர்மறையான வேடத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. முக்கோண காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் அனுபமா நிதினின் காதலுக்காக வில்லத்தனமான வேலைகளையும் செய்கின்றாராம். அண்மையில் வெளிவந்த இப்படத்தின் டிரைலரும் பாடல்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறவில்லை. பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான மஜ்னு படத்திலும் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வருகின்றார். நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் மஜ்னு படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் ஸ்ருதிஹாசன் மற்றும் மடோனா செபஸ்டியனும் நடிக்கின்றனர்.