ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் எழில்மாறன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இயக்குனர் எழில் இயக்கும், இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை, இவன்வேறமாதிரி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யா, இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது.
இதனிடையே வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் டிரைலரை சூர்யா நடித்துள்ள 24 படத்துடன் வெளியிட்டிருக்கிறார்கள். இதன்மூலம் இப்பட டிரைலரை சூர்யா பட தியேட்டர்களிலும் காணலாம்.
தன்பட டிரைலரை 24 படத்துடன் வெளியிட்டதற்காக விஷ்ணு விஷால், தங்களது படக்குழு சார்பில் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த நாள் என்னுடைய வாழ்நாளில் மிகமுக்கிய நாள் என்றும் இதுவரை நான் நடித்த படங்களுக்கு மிகப்பெரிய ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியிருப்பவர், சூர்யாவின் 24 படம் மாபெரும் ஹிட்டாக வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.