ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷாரூக்கான், தாதாவாக நடித்து வரும் 'ரேயீஸ்' படம் அடுத்தாண்டு ஜனவரி 26ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அன்றைய தினம் தான் அஜய் தேவ்கனின் பாத்ஷாகோ படமும், ஹிருத்திக் ரோஷனின் காபில் படமும் ரிலீஸாக இருக்கிறது. ஷாரூக்கானின் பட அறிவிப்பால் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராகேஷ் ரோஷன் அதிருப்தியில் இருக்கிறார். அதாவது தன்னுடைய காபில் படம் 2017, ஜன.,26ல் ரிலீஸாகும் என்று பிப்ரவரி மாதமே அறிவித்துவிட்டாராம் ராகேஷ், அப்படியிருக்கையில் இப்போது ஷாரூக்கானின் ரேயீஸ் படமும் அன்றைய தினம் ரிலீஸாவதாக அறிவித்திருப்பது படத்தின் வசூலை பாதிக்கும் என்று ராகேஷ் கருதுகிறாராம். அதனால் ரேயீஸ் படக்குழு மீது அதிருப்தியில் இருக்கிறார் ராகேஷ்.